பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
சிங்கப்பூர், 2023 – ஆம் ஆண்டு,

ஜூன் திங்கள் 16- 18

பெருமதிப்புக்குரிய தமிழ் அறிஞர் பெருமக்களே,

வணக்கம். உலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) தொடங்கப்பட்ட 1964-ஆம் ஆண்டு முதல் இதுவரை 10 உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. மன்றத்தின் முதன்மையான நோக்கமான தமிழ் ஆராய்ச்சிக்கு அளிக்கப்படும் இன்றியமையாமையை நிலைநிறுத்தவும் அடுத்துவரும் பதினொன்றாம்உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிங்கப்பூரில், 2023‑ஆம் ஆண்டு, மே திங்கள் 26முதல் 28 ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. நடைபெற்ற மாநாடுகளில் பெரும்பாலானவை அரசியல் தொடர்போடும் அரசாங்கத் துணையோடும் நடத்தப்பட்டன. ஆனால், இந்த மாநாடு உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணையோடும் சிங்கப்பூரிலுள்ள “The Millennial Tamils” ஒத்துழைப்போடும் நடைபெற இருக்கின்றது.

உலகத்தமிழ் ஆய்வுமன்றத்தின் முதன்மையான நோக்கம், “பொதுவாக த்திராவிடம் பற்றியும் சிறப்பாக த்தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகள்பல் வேறுதுறைகளில் அறிவியல் முறையில் செய்வதற்கான ஊக்குவித்தலும்,இவற்றோடு தொடர்புடைய பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர் பெருமக்களோடும், உலகநிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும் ஆகும்.” இம்மன்றத்தின் தலையாய நோக்கமே பதினொன்றாம் உலகத்தமிழ் மாநாட்டின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது:

புதிய வரலாற்றியல் கண்ணோட்டத்தில் தமிழ்ச் செவ்விலக்கியங்களை ஆராய்ந்து, முன்னைய, அண்மைக்கால அகழ்வாய்வுகளோடு, பிற அறிவியல் சான்றுகளை முன் வைத்து, தமிழர், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு நாகரிகம் ஆகியவற்றின் உண்மையான வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்தல்.”

இத்துடன் இணைக்கப்பட்ட ஆராய்ச்சித் தலைப்புகள் இம்மாநாட்டின் அடிப்படை நோக்கத்தைப் பல்வேறு கோணங்களில் விரிவுபடுத்திக் காட்டுபவை. ஆராய்ச்சித் தலைப்புகளையும், ஆராய்ச்சிக் கட்டுரைச் சுருக்கத்தையும் (Abstract), ஆராய்ச்சி முழுக்கட்டுரையையும் (Full Research paper), அனுப்ப வேண்டிய முறைகளை, இம்மடல் இணைப்பிலும், பின் வரும் வலைத்தளங்களிலும் (websites  www.iatrofficial.org or https://www.wtrc.org or email contact@icsts11.org) கண்டுகொள்க. அறிஞர்கள் சிறந்த ஆராய்ச்சிகளைச் செய்து முடிக்க விழைகின்றோம்

நீங்கள் இந்த ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்யவும், உங்களை மாநாட்டில் காணவும் விழைகின்றோம். மீண்டும் நன்றி, வணக்கம்.

அன்புடன்

பேரா.முனைவர் ப.மருதநாயகம்
தலைவர், ஆய்வுக்குழு பதினொன்றாம்உலகத்தமிழ்ஆராய்ச்சிமாநாடு
புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து இணைத்தலைவர், ஆய்வுக்குழு பதினொன்றாம்உலகத்தமிழ்ஆராய்ச்சிமாநாடு